பறவை வடிவிலான ட்ரோன்கள் மூலம் அதிவேக இன்டெர்நெட் - ஃபேஸ்புக் புதிய திட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பின் தங்கிய நாடுகளில் உள்ள கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் கிடைக்கும் வகையில் 'அக்குய்லா' என்ற திட்டத்தை பேஸ்புக் சில வருடங்களுக்கு முன்பு கையில் எடுத்தது. அதாவது பெரிய அளவிலான ட்ரோன்களை ஆகாயத்தில் நிலைநிறுத்தி அதன் மூலம் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கும் திட்டம். சோதனை முயற்சியாக 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் 'அக்குய்லா' ட்ரோன்களை ஒன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக நிலைநிறுத்தி வெற்றி கண்டது. 


Advertisement

இதற்காக 400 கிலோ அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்த திட்டத்தை கைவிடுவதாக 2018ம் ஆண்டு பேஸ்புக் அறிவித்தது. அதற்கான காரணத்தையும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. 


Advertisement

இந்நிலையில் இந்த திட்டத்தை தற்போது மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது பேஸ்புக். ஆனால் இந்தமுறை பெரிய அளவிலான ட்ரோன்கள் பயன்படுத்தப்படாமல் சிறிய பறவை அளவிலான ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைகளிலும் இறங்கியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

இந்த டிரோன்கள் ஹை-டென்சிட்டி சாலிட் ஸ்டேட் டிரைவ்களை கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், டிரோன்கள் பயனர்களின் ஸ்மார்ட்ஃபோன்களில் அதிவேக இணைய வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் இது மாதிரியாக ட்ரோன் முயற்சிகளை எடுத்து வருகின்றன. எந்த நிறுவனத்தின் ட்ரோனாக இருந்தாலும் பயன்படுத்தப்பட போகும்  நாட்டின் அனுமதியை வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement