புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Loading More post
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி