கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் - ராகுல் காந்தி

We-will-employ-lakhs-of-rural-youth-in-our-gram-sabhas-to-improve-the-environment-says-rahulgandhi

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ‌லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


Advertisement

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை, புதிய திட்டங்களை கொடுத்து வருகின்றன. அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் நாட்டிலுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தெரிவித்தது.


Advertisement

இந்நிலையில் கிராமசபைகளில் இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டு சூழல் பாதுகாப்பு பணி அவ‌ர்களுக்கு தரப்படும் என ராகுல் காந்தி தன் ட்விட்டர் பதிவில் தெரி‌வித்துள்ளார். தூர்ந்து போய் சீரழிந்துள்ள நீர் நிலைகளை மீட்டெடுப்பதும் வனங்களை உருவாக்குவதும் அவசியம் என்றும் ‌ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

விரைவில் வெளியிடப்படவிருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், வேலை வாய்ப்புகள் உருவாக்குவது குறித்தும், விவசாயம், கல்வி மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களும் இடம்பெறும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 


Advertisement

முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்ச வருமானமாக 72 ஆயிரம் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும் எனவும் ராகுல் தெரிவித்திருந்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும் என்றும் அதற்கு பதிலாக புதிய திட்டக்குழு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement