[X] Close >

“பிரதமரின் ‘மிஷன் சக்தி’ அறிவிப்பில் விதிமீறல் இல்லை” - தேர்தல் ஆணையம் 

EC-gives-clean-chit-to-PM-Modi-s--Mission-Shakti--address

விண்வெளி சாதனை தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement

நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாகவும், அந்த உரையில் முக்கியமான அம்சம் இடம்பெற்றுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 27ஆம் தேதி காலை அறிவித்தார். அந்த அறிவிப்பினால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில், விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா சோதனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்தச் சாதனையை படைத்துள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சாதனை மூலம் எலைட் சூப்பர் கிளப் எனப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்திருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். 


Advertisement

                 

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து, விண்வெளியில் இந்தியா ஆற்றிய சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள், அத்துடன் தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் கேள்வி எழுப்பினர். அத்துடன், பிரதமர் மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.

அதனையடுத்து, பிரதமரின் உரையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் இருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து, அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனே ஆய்வு செய்யப்படும் என்றும், அதில் மோடியின் உரையில் தேர்தல் விதிமுறை மீறல் உள்ளதாக என ஆராயப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


Advertisement

                   

இந்நிலையில், விண்வெளி சாதனை தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பில் நடத்தை விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரதமர் தன்னுடைய உரையில் அவர் சார்ந்த கட்சியின் பெயரையோ, வாக்கு சேகரிக்கும் வகையிலோ எதனையும் பேசவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close