வங்கிக் கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
13,500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டதாக நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் இங்கிலாந்தில் சுதந்திரமாக சுற்றித் திரிவது சமீபத்தில் தெரியவந்தது. அவரை நாடு கடத்தும்படி இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து நீதிமன்றம் நிரவ் மோடிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கமுடியாது என மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது, நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. கடன் மோசடி வழக்கில் சாட்சியம் அளித்த நபருக்கு நிரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இந்திய தரப்பில் கூறப்பட்டது.
இதனையடுத்து, நிரவ் மோடியை ஏப்ரல் 26ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!