[X] Close >

மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு: காலை 4.30 மணி முதல் இயக்கம்

Chennai-metro-rail-operation-timings-extended

சென்னையில் மெட்ரோ ரயில் காலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் சென்ட்ரல் - பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் என இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலின் நேரம் நீட்டிக்கப்படுகிறது. விமானநிலையம், கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி, காலை 4.30 மணிக்கு சேவை தொடங்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு பதிலாக 11 மணி வரை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இதில், காலையில் 4.30 மணி, 5 மணி, 5.30 மணி என அரைமணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அலுவலக நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒரு ரயில் வீதம் இயக்கப்படும். 2 வார காலம் சோதனை அடிப்படையில் இது இயக்கப்படும். பயணிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து, இந்த சேவை நீட்டிக்கப்படும் என்று மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close