4ஜியில் பின்தங்கி இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்கள்!

4ஜியில் பின்தங்கி இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்கள்!
4ஜியில் பின்தங்கி இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்கள்!

இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரத்தில் தான்  4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஓப்பன்சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்குள்ள 4ஜி யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரத்தில் 95.3% 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக 95% பெற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியும், 94.9 % பெற்று ஸ்ரீநகரும் இடம்பிடித்துள்ளன. 94.8% பெற்று நான்காம் இடத்தில் ராய்பூரும், பாட்னா அடுத்த நிலையிலும் இருக்கிறது. இந்த ஆய்வு, 4ஜி வசதி கிடைக்கும் எல்லையை வைத்து கணக்கிடாமல், பயனாளர்களின் பயன்பாட்டு நேரத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா  ஆகியவை முதல் 10 இடங்களில் கூட இடம்பிடிக்கவில்லை. 4ஜி வசதியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பின்னிலையிலேயே இருக்கின்றன. டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்கள் சற்று பின்தங்கியே உள்ளன. பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் 92%களில் உள்ளன. 

ஆனாலும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் எல்லாம் 87%க்கும் அதிகமான 4ஜி அளவை பெற்றுள்ளதாகவும், இந்தியாவை பொறுத்தவரை 4ஜி வசதி கொடுப்பதில் ஜியோ 96.7% பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும், இது மற்ற போட்டியாளர்களை விடவும் 20% வரை அதிகம் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com