[X] Close >

தேர்தல் நடைமுறை மீறலா? - பிரதமரின் உரை குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

Election-Commission-examine-Modi-addressed-matter-immediately-in-the-light-of-Model-Code-of-Conduct

மிஷன் சக்தி சோதனை தொடர்பான பிரதமர் மோடியின் உரையில் தேர்தல் விதிமீறல் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு ஆற்றிய உரையில், விண்வெளித்துறையில் மிகப்பெரிய சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். விண்வெளியில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தியை வெற்றிகரமாக இந்தியா செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்தச் சாதனையை படைத்துள்ள விஞ்ஞானிகளைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சாதனை மூலம் எலைட் சூப்பர் கிளப் எனப்படும் நாடுகள் வரிசையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்திருப்பதாகவும் பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதனையடுத்து, விண்வெளியில் இந்தியா ஆற்றியுள்ள இந்தச் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், தேர்தல் நேரத்தில் பிரதமர் ஆற்றிய உரை குறித்தும் கேள்வி எழுப்பினர். அத்துடன், பிரதமர் மோடியின் உரை குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பிரதமரின் உரையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் இருக்கிறதா ? என்பதை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கான பிரத்யேக அதிகாரிகள் குழுவை நியமித்து, அவர்களின் நேரடி கண்காணிப்பில் பிரதமரின் உரை உடனே ஆய்வு செய்யப்படும் என்றும், அதில் மோடியின் உரையில் தேர்தல் விதிமுறை மீறல் உள்ளதாக என ஆராயப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close