கோவை சிறுமியின் கொடூர கொலையைக் கண்டித்து சாலை மறியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கோவை துடியலூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஒருவர், தனது  6 வயது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்டு காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்தச் சிறுமி காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி எனக் கண்டுபிடிக்கப்பட்டது.


Advertisement

இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போக்சோ பிரிவும் சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலை குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் கோவை துடியலூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement