சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி இன்று டெல்லியில நடக்குதுங்க. இந்தப் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஆர்வத்தோட காத்துட்டு இருக்காங்க.. டெல்லி ரசிகர்களும் ஆர்வமாக தான் இருக்காங்க, ஆனா சென்னை ரசிகர்கள் அளவுக்கு இல்லனு தான் சொல்லனும்.. இதுக்கு நடுவுல மும்பை ரசிகர்களும் இந்தப் போட்டியை காண ஆர்வமாக இருக்காங்க... சென்னைக்கும் டெல்லிக்கும் போட்டி இதுல என்ன மும்பைக்கு ஆர்வமுன்னு கேக்குறீங்களா..
ஆமாங்க... கடந்த போட்டியில மும்பையை டெல்லி ஜெயிச்சிட்டாங்க.. அதுக்கு சென்னை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு மும்பை செஞ்சுட்டாங்க.. இப்போ சென்னை டெல்லியை ஜெயிச்சிட்டாங்கனா... அப்பறம் சென்னை ரசிகர்கள் மறுபடியும் மும்பை மீம்ஸ் போட்டு கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க..
அதே சென்னை தோத்துட்டா.. அது அப்புடியே ரிபீட்டாகி மும்பை பேன்ஸ் சென்னையை மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க.. இது தான் சென்னைக்கும், மும்பைக்கும் இருக்கிற ஐபிஎல் பந்தம்-னு எல்லாருக்குமே தெரியும்..
சரி இன்றைய போட்டிக்குள்ள போவோம்...
சென்னை கடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 70 ரன்களில் சுருட்டி, ஜெயிச்சிட்டாங்க.. ஆனா, இன்றைய போட்டியில அனல் பறக்கும் மோதல் இருக்குங்க.. குறிப்பாக டெல்லியில் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, மற்றும் ரிஷாப் பந்து உள்ளிட்ட இளம் வீரர்கள் பேட்டிங் சற்று கடினமாக இருக்குமாங்க. அதுமட்டுமில்லாம தவான், மன்ரோ ஆகிய அனுபவ வீரர்களும் டெல்லியில இருக்காங்க.. இதனால சென்னை அணி முதல் பேட்டிங் செய்தால் கட்டாயம் 170 ரன்களுக்கு மேலயாவது எடுக்கனும்..
இதனை சமாளிக்க தோனியும், ஸ்டீபன் ஃபிளமிங்கும் சேர்ந்து ஒரு ப்ளான் போட்டுருக்காங்க.. அது பெரிய மாஸ்டர் ப்ளான்ளாம் இல்லைங்க.. தோனியோட சிம்பிள் ப்ளான் தானாம். சென்னையோட முதல் பேட்டிங் மற்றும் இரண்டாவது பேட்டிங் இரண்டிற்குமே ஒரே திட்டத்தை தான் தோனி போட்டுக்காரு.
ப்ளான்படி, முதல் பேட்டிங் செய்தால் 190 ரன்கள் குவிக்கும் அளவிற்கு அதிரடியை காட்டனும்.. அதுக்காக அதிரடியாக விளையாடும் வீரர்கள் ஆரம்ப்பத்துல இருந்தே அடுத்தடுத்து களமிறக்க போறாங்க.. இந்த லிஸ்ட்ல தோனியும் இறங்கப்போறாருங்க... அப்புடினா இன்னைக்கு தோனியோட ஹெலிகாப்டர் ஷாட் சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைக்க போகுதுனு சொல்லலாம்..
அதே முதல் பவுலிங் செஞ்சா., பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு ஏற்றாமாறி பவுலர்களை மாத்தி மாத்தி பந்துவீச வைக்கப்போறாரு.. வழக்கமாக மேட்ச்சோட நிலைமைக்கு தேவையான மாதிரி தான் பவுலர்களை தோனி டிசைட் பண்ணுவாறு.. ஆனா இந்தப் போட்டியில பேட்ஸ்மேனுக்கு தேவையான மாதிரி பவுலர்களை களத்துல இறக்கப்போறாரு.. ஐபிஎல் மான்ஸ்டார் தோனியோட இந்த சிம்பிள் ப்ளான்ல இருந்து டெல்லி தப்பிக்கானு பொருத்திருந்து தான் பாக்கனும்...
இதுபோன்ற ஐபிஎல் அப்டேட்ஸ்களுக்கு புதிய தலைமுறை டிஜிட்டலோட இணைந்திருங்க... புதிய தலைமுறைக்காக அபர்னா மற்றும் சக்தி சரவணன்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி