நாங்கள் கங்கையை சுத்தம் செய்ததால், நீரை பிரியங்கா அருந்த முடிந்தது - நிதின் கட்கரி

Priyanka-Gandhi-s-Ganga-Yatra-proof-of-Modi-government-s-development-says-Nitin-Gadkari

பா‌ஜக அரசு கங்கையை சுத்தம் செய்ததால்தான் அதன் நீரை பிரியங்கா அருந்த முடிந்தது என்று மத்திய அமைச்‌சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்


Advertisement

மக்களவைத் தேர்தலுக்காக நீர்நிலைகளின் வழியாகவும் பேருந்து, ரயில், பாதயாத்திரை வாயிலாகவும் பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தனது பரப்புரையை படகில் தொடங்கினார். 


Advertisement

நீர்நிலை‌ வழியாகச் செல்ல பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட படகில் பிரியங்கா தனது பயணத்தை தொடங்கி ஆற்றின் ஓரம் வசிக்கும் மக்களை சந்தித்து வந்தார்.  உத்தரப்பிரதேசத்தில் க‌டந்த வாரம் க‌ங்கை நதியில் படகு மூலம் பயணித்து பரப்புரை மேற்கொண்ட ‌பிரியங்கா காந்தி கங்கை நீரை பருகும் படமும் வெளியாகியிருந்தது. அதனை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பா‌ஜக அரசு கங்கையை சுத்தம் செய்ததால்தான் அதன் நீரை பிரியங்கா அருந்த முடிந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் கூறியுள்ள அவர், பிரயாக்ராஜிலிருந்து வாரணாசிக்கு நீர் வழிப் பாதையை தங்கள் அரசு அமைத்ததாக குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்று ‌பிரியங்கா‌ கங்கையில் பயணம் செய்திருக்க முடியுமா‌ என்றும் கட்கரி கேள்‌வி‌ எழுப்பினார். மேலும் வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கங்கை நதி 100 சதவிகிதம் சுத்தமாகி விடும் என்றும் கட்கரி தெரிவித்தார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement