நாடாளுமன்றத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 97 தொகுதிகளுக்கு நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு நாளையுடன் நிறைவடைகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு இதுவரை 254 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வேட்புமனுக்கள் அளிப்பதற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாகல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுத்தாக்கலும் நாளையுடன் நிறைவடைகிறது. 18 தொகுதிகளுக்கும் இதுவரை 72 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை மறுநாள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இறுதிவேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?