ஒடிசா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நேரங்களை மாற்றி ஒடிசா அரசு அம்மாநில பல்ளிக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது.
இந்தாண்டு வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இந்த சூழலில் காற்றில் ஈரப்பதும் குறைந்துள்ளது. மேலும் வானில் மேக மூட்டங்கள் அதிகம் காணப்படாததால் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டீகிரியை தாண்டியுள்ளது. அது போல ஒடிசாவிலும் கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒடிசாவில் வெயில் சுட்டெரித்து வருவதால், பள்ளி நேரத்தை அம்மாநில அரசு மாற்றியமைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒடிசா மாநில அரசு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளது. அதில் பள்ளி நேரத்தை மாற்றி காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்க வேண்டும் என்றும், 11 மணிக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் பள்ளிகள் இயங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டதால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணிக்கே மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ