இடைத் தேர்தலின்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? மு.க.ஸ்டாலின் சந்தேகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆத‌ரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். 


Advertisement

அப்போது, திமுகவுக்கும், திருவண்ணாமலைக்கும் உள்ள வெற்றி‌கரமான தொடர்புகளை ஸ்டாலின் நினைவு கூர்ந்தார். மேலும், திருப்பரங்குன் றம் இடைத்தேர்தல் குறித்த வழக்கில், அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டி ஸ்டாலின் பேசினார். இந்த தீர்ப்பின் மூலம் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆவணத்தில் இருந்தது ஜெயலலிதாவின் கைரேகை அல்ல என்பது உறுதியாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். 

அப்படி என்றால், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா உயிருடன்தான் இருந்தாரா என்ற சந்தே‌ம் எழுந்திருப்ப‌தாக ஸ்டாலி ன் கூறினார். பதவியில் இருந்த ஒரு முதலமைச்சரின் மரணத்தில் மர்மம் இருப்பதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement