JUST IN

Advertisement

கேஜிஎப் , பேட்ட டயலாக் - ட்விட்டரில் பஞ்ச் அடிக்கும் சிஎஸ்கே வீரர்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிஎஸ்கேவின் வெற்றிக்கு பின்னர் ஹர்பஜனும், இம்ரான் தாஹிரும் படங்களின் டயலாக்கை ட்வீட்டாக போட்டு சிஎஸ்கே ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளனர்


Advertisement

12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதின. போட்டி சென்னையில் நடைபெற்றதால் நேற்றைய தினம் சென்னையே திருவிழா கோலம் பூண்டது. 


Advertisement

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய போட்டியில் மிக எளிதாக சென்னை வெற்றி பெற்றது. ஐபிஎல் என்றாலே கடைசிவரை பரபரப்பு நிலவும் என்ற நிலை நேற்றைய போட்டியில் இல்லாமல் போனது. போட்டி நடந்துகொண்டிருக்கும் போதே சென்னையின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டதால் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்த்தது ஹர்பஜன் மற்றும் இம்ரான் தாகீரின் ட்வீட்கள் தான். படத்தின் வசனங்களையும் அதிரடி டயலாக்குகளையும் தமிழில் ட்வீட் செய்து இருவரும் ஒரு ட்ரெண்டை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 

எதிர்பார்த்தது போலவே இருவரும் படத்தின் டயலாக்குடன் ட்வீட்டும் செய்தனர். போட்டிக்கு பிறகு ட்வீட் செய்த ஹர்பஜன், ''ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருப்பேன்னு நெனச்சியா. பஜ்ஜி டா போய் பழைய ஐபிஎல் ரெகார்ட்ட எடுத்து பாரு. பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ். என்ன ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ரோல்லிங் சார்! தந்தானி நானே தானி தந்தானோ'' என்று கேஜிஎப் படத்தின் தீம் மியூசிக்கோடு முடித்துள்ளார். 


Advertisement

சிஎஸ்கேவின் வெற்றி குறித்து ட்வீட் செய்த இம்ரான் தாகீர், நீ திரும்பவும் எங்கள தொட்டு இருக்க கூடாது. தொட்டுட்ட. தொட்டவன நாங்க விட்டது இல்ல. தப்பு பண்ணிட்ட சிங்காரம். முதல் அடி எப்பவும் இந்த பேட்டயோட அடி தான்’’ என  பேட்ட படத்தின் டயலாக்கை போட்டு சிஎஸ்கே ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement