வந்த வேகத்தில் அவுட் ஆன ஆர்சிபி வீரர்கள் - பரிதாபமான பார்த்தீவ் படேல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் பார்த்தீவ் படேல் மட்டுமே இரட்டை இலக்கில் ரன் எடுத்தார். 


Advertisement

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பவுலிங்கை தேர்வு
செய்தது. இதையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரார்களாக களம் இறங்கிய கோலியும் பார்த்தீவ் பட்டேலும் முதல் இரண்டு
ஓவர்களை நிதானித்து ஆடினர். இரண்டு ஓவருக்கு 12 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால் ஹர்பஜன் சிங் வீசிய 4 வது ஓவரில் விராட் கோலி 12
பந்துகளுக்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்து திடீரென விக்கெட்டை பறிகொடுத்தார். இது ஆர்சிபி ரசிகர்களுக்கும், விராட் கோலி ரசிகர்களுக்கும்
பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. 


Advertisement

அடுத்து களமிறங்கிய மொயின் அலியும், ஏபி டிவில்லியர்ஸும் 9 ரன்களில் அவுட்டாகினர். தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மைர் ரன் எடுக்காமலும்
சிவம் டுபி 2 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆர்சிபி அணி இழந்தது. இறுதியில் 70 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவரை கூட முழுமையாக விளையாட முடியாத பரிதாப நிலைக்கு ஆர்.சிபி அணி
தள்ளப்பட்டது. இதைவிட பரிதாப நிலையும் இந்த ஆட்டத்தில் உள்ளது. 

ஆர்.சி.பி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டானாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பார்த்தீவ் பட்டேல் நிதானித்து அவுட்டாகாமல் ஆடிவந்தார். ஆனால் மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். வரும் வீரர்கள் அனைவரும் பேட்டிங் பிடித்ததால் பார்த்தீவ் ரன் ஓடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் சூழ்நிலை நிலவியது. 


Advertisement

இறுதியில், 17 வது ஓவரில் பேட்டிங் செய்யும் இடத்திற்கு வந்த பார்தீவ் 35 பந்துகளுக்கு 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி விக்கெட்டாக அவுட் ஆனார். இந்த முதல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் பார்த்தீவ் மட்டுமே இரட்டை இலக்க ரன் அடித்தார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement