சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதல் பந்துவீச முடிவு செய்துள்ளது.
12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ் சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை அணியில் ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் மற்றும் ட்வையின் ப்ராவோ உள்ளிட்ட வெளிநாட்டு அணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர அம்பாத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஸ்ர்தல் தாகூர், ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல் பெங்களூரூ அணியில் விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், மோயின் அலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், சிம்ரன் ஹெர்ட்மேயர், சிவம் தூபே, காலின் டி க்ராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், சஹால், முகமது சிராஜ், நவ்தீப் செய்னி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, “கடந்தாண்டு ஐபிஎல் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இம்முறையும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். இது முதல் போட்டி என்பதால் ஆடுகளம் குறித்து சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் என் பார்வைக்கு இதில் பந்துகள் மிகவும் குறைந்த வேகத்தில் தான் வரும் என்று எதிர்பாக்கிறேன்” எனக் கூறினார்.
அதன்பின்னர் விராட் கோலி, “டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பந்துவீச்சு தேர்வு செய்திருப்போம். ஏனென்றால் மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பனி இருந்தது. இன்று பார்த்தீவ் பட்டேலுடன் நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளேன். ஆட்டத்தின் சூழலை பொருத்து ஏபிடி அல்லது மோயின் அலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?