‘தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப்’ - மறக்க முடியாத முதல் சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஐபிஎல் போட்டியில், தோல்வியை நோக்கிச் சென்ற போட்டியை வெற்றிபெற வைத்தார் தோனி.


Advertisement

ஐபிஎல் போட்டிகள் 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. முதல் ஐபிஎல் தொடரில் 15வது லீக் போட்டியில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இந்தப் போட்டி நடைபெற்றது. அப்போது பெங்களூரு அணிக்கு ராகுல் டிராவிட் கேப்டன். விராட் கோலி அந்த அணியில் இடம்பிடித்த இளம் வீரர் அவ்வளவுதான்.

            


Advertisement

சென்னை அணியில் தோனியும், ரெய்னாவும்தான் அந்தப் போட்டியில் இடம்பெற்றிருந்தார்கள். பெங்களூரு அணியில் ராஸ் டெய்லர், காலிஸ் போன்ற வீரர்கள் இருந்தார்கள். பந்துவீச்சில் ஸ்டெயின், ஜாகீர்கான் போன்றவர்கள் இருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி 30 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகள் உட்பட 65 ரன்கள் விளாசினார். 24 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார். 

          

பின்னர், 179 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 100 ரன்களை எட்டியது. வாசிம் ஜாபர், டெய்லர் இருவரும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதனால், பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 9 ஓவர்களில் 79 ரன்கள் என்பது அடிக்கக் கூடிய ஒன்றுதான்.


Advertisement

                 

ஆனால், ஜாபர் 50, டெய்லர் 53 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவர்களில் கூட வெறும் 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 7 விக்கெட்கள் கையில் இருந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தன. தோனி 19வது ஓவரில் கடைசி இரண்டு பந்தில் அசத்தலாக 2 ரன் அவுட் செய்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட ஒரு விக்கெட் பெங்களூர் கைவசம் இருந்தது. அதனால் போட்டியில் இறுதிவரை பரப்பு நிலவியது. ஜோகிந்தர் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சில் 19.4 ஓவரில் இரண்டு பந்துகள் மீதமிருக்க 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

             

இரு அணிகளும் மோதிய முதல் போட்டியே மிகவும் பரபரப்பாக இருந்தது. தோனி பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பில் ஜொலித்தார். தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த போட்டியை வெற்றி பெற செய்தார். அந்தப் போட்டியில் தோனிக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. 

            

சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடந்த 6 போட்டிகளில் சென்னையே வெற்றி வாகை சூடியுள்ளது. பெங்களூரு அணி 7 போட்டிகளில் வென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் 23வது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement