“ஐந்து இஸ்லாமியர்கள் மட்டும்தான் வேட்பாளர்களா?” - பாஜகவினர் விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ள முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இஸ்லாமியர்கள் 5 பேருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரா‌க செயல்படுகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பாஜக அந்தக் குற்றச்சாட்டை முறியடிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள 184 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலில் வெறும் ஐந்து இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 


Advertisement

அதில் மூன்று தொகுதிகள் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று தொகுதிகளிலும் இஸ்லாமியர்கள் 90 சதவீதம் பேர் என்பதால், ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கில் 3 பேர் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் மற்ற தொகுதிகளான உத்தம்பூர், ஜம்மு ஆகியவற்றில் இந்துக்களின் வாக்குகளை பெற ஜிதேந்தர், ஜகுல் கிஷோர் ஷர்மா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

  

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தை பொருத்தவரை இருக்கக்கூடிய ஒரு தொகுதியில் அப்துல் காதிர் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். மொத்த மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பதால், இஸ்லாமிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தெலங்கானா மாநிலத்தின் மெகபூபாபாத் தொகுதி ஹுசைன் நாயக் என்ற இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Advertisement

  

தமிழகத்தைப் பொருத்தவரை ராமநாதபுரம் தொகுதி இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டிய இடங்களில் கூட பாஜக அவ்வாறு நிறுத்தவில்லை.

 

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரிடம் பேச முற்பட்ட போது, அடுத்த வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கான முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். எனவே அடுத்த வேட்பாளர் பட்டியலில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் இஸ்லாமியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement