பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - வாரணாசியில் மோடி போட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 182 பேர் கொண்ட முதற்கட்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டார். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியும் குஜராத் மாநிலம் காந்திநகரில் அமித்ஷாவும் போட்டியிடுகின்றனர். வழக்கமாக காந்திநகர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் அத்வானிதான் போட்டியிடுவார். ஆனால் இந்த முறை அத்வானிக்கு சீட்டு ஒதுக்கப்படவில்லை. உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார். 


Advertisement

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி ராணி போட்டியிடுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் நிதின்கட்கரியும், காசியாபாத் தொகுதியில் வி.கே.சிங்கும் போட்டியிடுகின்றனர். மதுரா தொகுதியில் ஹேமமாலினியும், ரேபரேலி தொகுதியில் சந்தோஷ்குமார் கங்குவாரும், உன்னாவ் தொகுதியில் சாக்‌ஷி மகாராஜும் போட்டியிடுகின்றனர். 

தமிழகத்தை பொருத்தவரை தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிடுகிறார்.


Advertisement

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சிவகங்கை தொகுதியில் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார். கோவையில் சி.பி ராதாகிருஷ்ணன், மற்றும் ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement