நடிகை வடிவுக்கரசி வீட்டில் நகை கொள்ளை 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை திநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

நடிகை வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.


Advertisement

இவர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ‘கன்னிப் பருவத்திலே’. இத்திரைப்படத்தில் இவர் நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தொடக்கக் காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களிலும் சில திரைப்படங்களில் எதிர்மறையான பாத்திரங்களிலும் நடித்துள்ளார். ‘அருணாச்சலம்’படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

நடிகை வடிவுக்கரசி தி.நகர் வெங்கட்ராமன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் வீடு திநகரின் மற்றொரு பகுதியில் உள்ளது. இந்நிலையில், வடிவுக்கரசி தனது வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்குச் சென்று விட்டார். 


Advertisement

இதையடுத்து நேற்றிரவு குடியிருப்புக்கு பணிக்கு வந்த காவலாளி மாடியில் உள்ள வடிவுக்கரசி வீட்டின் அறையில் லைட் வெளிச்சம் இருப்பதை பார்த்து வடிவுக்கரசியின் சகோதரர் அறிவழகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அவர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். 

அப்போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் பாண்டிபஜார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement