கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தூக்கி வீசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரவக்காடு ஸ்ரீதேவி கோயிலில் கட்டப்பட்டுள்ள இரு யானைகளில், ஓமலூர் கோவிந்தகுட்டி எனும் யானையிடம் செல்ஃபி எடுக்க ஒரு நபர் முயல்கிறார். அப்போது, மரத்தில் கட்டப்பட்டுள்ள யானை அந்த நபரை தூக்கி வீசுவதுடன், உடம்பை லேசாக இழுத்து முன்வந்து மேலும் தாக்குகிறது.
அருகிலிருந்த பாகன் உட்பட பொதுமக்கள் யானையை திசைதிருப்ப முயல்வே, தாக்கப்பட்ட நபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தையும், அங்கு வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மற்றொரு நபர் பதிவு செய்துள்ளார். தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
வன விலங்குகளிடம் செல்ஃபி மோகத்தினால் அருகாமையில் சென்றால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். தாக்கப்பட்ட நபர், புன்னப்ரா குன்னம்பள்ளி பகுதியை சேர்ந்த ட்ரக் ஓட்டுனரான ரனீஷ் என்பது தெரியவந்துள்ளது. பலத்த காயமுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்