கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இருவர் பலி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 


Advertisement

வடக்கு கர்நாடகாவில் உள்ள தர்வத் பகுதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமான பணிகளின் போதே இன்று அந்தக் கட்டடம் இடிந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 50 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஜேசிபி மூலம் நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள முதல்வர் குமாரசாமி, “மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதேபோல், கூடுதல் சிறப்பு மீட்பு படையினரை விமானம் மூலம் தர்வத்திற்கு அனுப்பி வைக்குமாறும் வலியுறுத்தியுள்ளேன்” என்று தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

         

விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கட்டுமான பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வந்துள்ளன. முதல் இரண்டு தளங்களில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மூன்றாவது தளத்திற்கான பணிகள் நடைபெற்று வந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, முதல் இரண்டு தளங்களில் துணிக்கடை, மெடிக்கல், ஹோட்டல் உள்ளிட்ட 60 கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன.

loading...

Advertisement

Advertisement

Advertisement