நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து ! திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் தகவல்

நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து ! திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் தகவல்
நீட் தேர்வு, கல்விக் கடன் ரத்து ! திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் தகவல்

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க நடவடிக்க எடுக்கப்படும்

* வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்

* குறைந்தப்பட்ட ஊதிய தொகை ரூ.8000 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை

* பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் பழைய நடைமுறை கொண்டுவரப்படும்

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்ய நடவடிக்க எடுக்கப்படும்.

* மாணவர்களுக்கான கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்

* தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த தக்க நடவடிக்கை

* மதுரை, திருச்சி, கோவை, சேலத்தில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பபடும்

* 10-ஆம் வகுப்பு முடித்த 50 லட்சம் பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்

* பெண்களுக்கு தொழில் தொடங்க ரூ.50,000 வரையில் வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை

* மாணவர்களுக்கு ரயில்களில் இலவச பயண சலுகை

* கீழடியில் தொல்லியில் ஆய்வு தொடரும். அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட நடவடிக்கை

* புயல் பாதிப்பு பகுதிகளில் நிரந்தர வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்

* சுங்கச்சாவடிகளில் டெண்டர் முடிந்த பிறகும் வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம் ரத்து செய்யப்படும்

* ஏழை நெசவாளர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும்.

* கார்ப்பரேட் நிறுவனங்களில் 55 லட்சம் பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

* சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

* ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை

* கேபிள் டிவிக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களின் மாண்புகளை பாதுகாக்க நடவடிக்கை
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com