18 சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவை தேர்தல் ஏப்ரம் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இன்று திமுக சார்பில் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் மட்டுமின்றி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அப்போது பேசிய அவர், இது மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல. இது ஒரு மினி சட்டமன்ற தேர்தல். டெல்லியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நடக்க போகிறது என்று தெரிவித்தார்.


Advertisement

முன்னதாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வைத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வேட்பாளர் பட்டியலை அளித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.


Advertisement

18 சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள்:

பூந்தமல்லி (தனி)- ஆ.கிருஷ்ணசாமி
பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
திருப்போரூர் -  செந்தில் (எ) எஸ்.ஆர்.எல்.இதயவர்மன்
சோழிங்கர் - அ.அசோகன்
குடியாத்தம் (தனி) - எஸ். காத்தவராயன்
ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்
ஓசூர் - எஸ்.ஏ.சத்யா
பாப்பிரெட்டிபட்டி - ஆ. மணி


Advertisement


அரூர் (தனி) - செ. கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை (தனி) - சி.செளந்தரபாண்டியன்
திருவாரூர் - பூண்டி. கே.கலைவாணன்
தஞ்சாவூர் - டி.கே.ஜி.நீலமேகம்
மானாமதுரை (தனி) - கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன்
பெரியகுளம் (தனி) - கே.எஸ்.சரவணகுமார்
சாத்தூர் - எஸ்.வி.ஸ்ரீனிவாசன்
பரமக்குடி (தனி) - ச.சம்பத்குமார்
விளாத்திகுளம் - ஏ.சி. ஜெயக்குமார்

புதுச்சேரி :

தட்டாஞ்சாவடி - கே.வெங்கடேசன்

loading...

Advertisement

Advertisement

Advertisement