"ஒருநாள் போட்டிகளில் நான் சிறப்பாகவே பந்துவீசி இருக்கிறேன்" ரவிசந்திரன் அஸ்வின்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய பந்துவீச்சு மோசமாக இருந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


Advertisement

இந்திய அணியின் முன்னனி சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின். இவர் 2013 ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இடம்பிடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார். அவர், “அனைவரும் நினைக்கும் அளவிற்கு ஒருநாள் போட்டியில் என்னுடைய ரெகார்டு மோசமாக இருந்ததில்லை. wrist சுழற்பந்துவீச்சாளர்கள் தற்போது அணிக்கு தேவைப்படுவதால் தான் எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

                 


Advertisement

கடைசியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 2017ல் விளையாடிய போட்டியில் நான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தேன். என்னுடைய முந்தைய ஆட்டங்களை எப்போதுமே நான் திரும்பி பார்ப்பது உண்டு. அதைவைத்து பார்க்கும் போது தற்போது அணியின் தேவை காரணமாகவே நான் தேர்வு செய்யபடவில்லை. அதற்கும் என்னுடைய ஆட்டத் திறனிற்கும் சம்பந்தமில்லை. மேலும் நான் எந்த ஒரு தனிப் பிரிவு கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

           

முன்னதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஒருநாள் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படாதது குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், “மகேந்திர சிங் தோனி நான் அணியில் இருந்து நீக்கப்படும் பல சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றினார். அவர் எனக்கு பக்க பலமாக இருந்தார். ஆம்;  தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு சீனியர் வீரராக என்னிடம் தோனி, ‘நீங்கள் மிகவும் களைப்படைந்துள்ளீர்கள் என்று  எனக்குத் தெரியும். ஆனால் ஒரு சீனியர் வீரராக நீங்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும்’என்று கூறியிருந்தார்” எனத் தெரிவித்தார். இந்தச் சூழலில் இந்திய அணியின் மற்றொரு முக்கிய வீரரான அஸ்வின் மனம் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement