இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டத்திற்கு காரணம் அவரது மனவலிமைதான் என்று ஏபி டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி, ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஏபி டிவில்லியர்ஸ் விராத் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஸ்போட்ஸ்24க்கு அளித்த பேட்டியில், “தற்போது விளையாடும் வீரர்களில் மிகவும் தலைசிறந்த வீரர் கோலி. அத்துடன் அவர் தான் சிறந்த ஒருநாள் போட்டி வீரர். கடந்த சில காலங்களாக கோலியின் ஆட்டம் சிறப்பாகவுள்ளது. ஒவ்வொரு வீரரும் அவரின் கிரிக்கெட் விளையாட்டில் சில காலங்கள் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பார்கள். அந்தவகையில் தான் கோலி தற்போது விளையாடிவருகிறார்.
மேலும் கோலியுடன் நான் 8ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவருகின்றேன். அதனால் அவரின் ஆபாரமான ஆட்டத்தை நான் அருகிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன். அதைவைத்து பார்க்கும் போது கோலியின் ஆளுமை மற்றும் மன வலிமை தான் அவரின் இந்த ஆபார ஆட்டத்திற்கு காரணம். வரும் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிதான் என்னை பொருத்தவரை உலகக் கோப்பையை வெல்ல சாதகமான அணி. இவர்களுடன் சேர்த்து ஆஸ்திரேலியா அணிக்கும் வாய்ப்பு உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் அவர்கள் உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பு குறைவே” எனக் கூறியுள்ளார்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!