JUST IN

Advertisement

“என்னை நீக்க வேண்டிய தருணங்களிலிருந்து காத்தவர் தோனி” - இஷாந்த் சர்மா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியிலிருந்து என்னை நீக்க வேண்டிய தருணங்களில் எல்லாம் காப்பாற்றியவர் மகேந்திர சிங் தோனி என்று வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.  


Advertisement

இந்திய அணியில் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இஷாந்த் சர்மா. தோனி தலைமையிலான இந்திய அணியில், அவர் சிறந்து விளங்கியவர். குறிப்பாக 2003 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இஷாந்த் முத்திரை பதித்தார். தற்போது அவர் இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

                


Advertisement

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இஷாந்த் பேசுகையில், “மகேந்திர சிங் தோனி நான் அணியில் இருந்து நீக்கப்படும் பல சூழ்நிலையிலிருந்து என்னைக் காப்பாற்றினார். அவர் எனக்கு பக்க பலமாக இருந்தார். ஆம்;  தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஒரு சீனியர் வீரராக என்னிடம் அவர், ‘நீங்கள் மிகவும் களைப்படைந்துள்ளீர்கள் என்று  எனக்குத் தெரியும். ஆனால் ஒரு சீனியர் வீரராக நீங்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.  

இஷாந்த் சர்மா தற்போது டெல்லி அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உலகக் கோப்பைக்காக வாய்ப்பு குறித்து கூறுகையில், “பந்துவீசுவதற்கான வாய்ப்பினை மட்டுமே எதிர்நோக்கி உள்ளேன். விக்கெட்கள் வீழ்த்த வேண்டும் என்பதே எனது விருப்பம். ஐபிஎல் தொடரை எனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறேன். இதில் என்னுடைய முழு திறமையை வெளிப்படுத்துவேன். அதன் மூலம் உலகக் கோப்பைக்கான அணியில் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.

               


Advertisement

இஷாந்த் சர்மா 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 267 விக்கெட்களையும், 80 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். அதேபோல், 14 டி20 போட்டிகளில் 8 விக்கெட்களையும், 76 ஐபிஎல் போட்டிகளில் 58 விக்கெட்களையும் எடுத்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement