[X] Close >

கேரள தாய்மார்களில் 22552 பேர் 19 வயதுக்குட்பட்டவர்கள்! அதிர வைக்கும் புள்ளிவிவரம்!

22-552-girls-aged-below-19-gave-birth-in-2017-says-Kerala-report

கேரளாவில் 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 19 வயதுக்குட்பட்ட பெண்கள் 22552 பேர், குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கேரள அரசின் மாநில பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை சமீபத்தில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டது. அதில் 2017ம் ஆண்டின் படி கேரளாவில் பிறப்பு விகிதத்தில் 4.48%  குழந்தைகளுக்கு 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தான் அம்மாவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களை விடவும் நகரங்களில் தான் 19 வயதுக்குட்பட்ட தாய்மார்கள் அதிகம் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதன்படி நகரத்தில் 16639 பெண்களும், கிராமத்தில் 5913 பெண்களும் 19 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


Advertisement

அது போல கிராமப்புறங்களில் உள்ள 19 வயதுக்குட்பட்ட 137 பெண்கள் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்துள்ளதாகவும், 48 பெண்கள் 3 குழந்தைகளையும், 37 பெண்கள் 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நகரங்களை பொறுத்த வரை 19 வயதுக்குட்பட்ட 298 பெண்கள் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளதாகவும், 20 வயதுக்குட்பட்ட 21 பெண்கள் 3 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மத அடிப்படையில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, 17082 பெண்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாகவும், 4734 பெண்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்களாவும், 702 பேர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்களாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள அரசு, ''இந்த புள்ளிவிவரம்,  குழந்தை திருமணம் இன்னமும் நடந்து வருவதை உறுதி செய்கிறது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக தெரிகிறது. இந்த புள்ளிவிவரம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close