பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - இருவர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகரில் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் பேசிய அந்த நபர், விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்றும் சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். 

Related image


Advertisement

இதனையடுத்து உடனடியாக பேருந்து நிலையத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சோதனையை தீவிரப்படுத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டதில் வெடிகுண்டு வைக்கப்படாதது உறுதி செய்யப்பட்டது. 

Related image

இதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் ஆவடியாபுரத்தை சேர்ந்த ராஜா முஹம்மது மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த காளிமுத்து என்பது தெரிய வந்தது. பின்னர் விசாரணையில் இருவரும் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. 


Advertisement

இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்பியது, மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement