எல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் !

எல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் !
எல்.ஐ.சி - நிறுவனத்தில் 590 காலிப்பணியிடங்கள் !

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்தில், அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பணிக்கு 590 காலியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist)
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT)
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA)
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial)
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha)

காலிப்பணியிடங்கள்:
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist) - 350 
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT) - 150 
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA) - 50 
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial) - 30 
அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha) - 10

மொத்தம் = 590 காலிப்பணியிடங்கள்
 

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.03.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 22.03.2019
முதல் நிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்: 22.04.2019 முதல் 30.04.2019 வரை 
முதல் நிலை (Prelims) தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 04.05.2019 & 05.05.2019 
முதனிலை (Mains) தேர்வு நடைபெறும் தற்காலிக தேதி: 28.06.2019

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 01.03.2019 அன்று 21 வயதை பூர்த்தி செய்தவராகவும், 30 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
02.03.1989-க்கு பின்னும், 01.03.1998 க்கு முன்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

சம்பளம்:

அடிப்படை சம்பளமாக ரூ.32,795 முதல் ரூ.62,315 வரை வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.100
மற்ற பிரிவினர் - ரூ.600

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.

கல்வித்தகுதி:
1. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Generalist) என்ற பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
2. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (IT) என்ற பணிக்கு, கம்யூட்டர் சயின்ஸ் / ஐடி / எலக்ட்ரானிக்ஸ் / எம்.சி.ஏ / எம்.எஸ்சி (கம்யூட்டர் சயின்ஸ்) போன்ற பட்டயப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
3. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (CA) என்ற பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் சிஏ பட்டப்படிப்பை பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
4. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Actuarial) என்ற பணிக்கு,  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
5. அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் (Rajbhasha) என்ற பணிக்கு,  ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பில் இந்தி / ஆங்கிலம் / சமஸ்கிருதம் போன்ற படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் / பல்கலைக் கழகத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/licaaofeb19/basic_details.php - என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற,
www.licindia.in/careers - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com