மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி அமைக்கும் முயற்சியில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் ஈடுபட்டன. இதில், திமுகவை காட்டிலும் தொடக்கத்தில் அதிமுக வேகமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. அதாவது பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 தொகுதிகள் என அடுத்தடுத்து கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. ஆனால், தேமுதிகவின் நிலைப்பாட்டால் அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறாமல் இருந்து வந்தது. இதனிடையே, கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதி ஒதுக்கி தானும் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே, தேமுதிக உடனான உடன்பாடு இழுபறியில் இருந்த நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கி அதிமுக கூட்டணியை உறுதி செய்தது. இருப்பினும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியால் அதிமுக கூட்டணி முடிவுக்கு வராமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக தமாகா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கான கூட்டணி ஒப்பந்தத்தில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோர் கையொப்பமிட்டனர். இதன்மூலம் அதிமுக 20 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.
அதிமுக கூட்டணி நிலவரம்:-
அதிமுக - 20 தொகுதிகள்
பாமக - 7 தொகுதிகள்
பாஜக - 5 தொகுதிகள்
தேமுதிக - 4 தொகுதிகள்
புதிய தமிழகம் - 1 தொகுதி
புதிய நீதிக்கட்சி - 1 தொகுதி
தமாகா - 1 தொகுதி
என்.ஆர்.காங்கிரஸ் - 1 தொகுதி
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்