பொள்ளாச்சி சம்பத்தை கண்டித்து உடுமலையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் கண்டனக் குரல்களை பதிவு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உடுமலையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையான விசாரணை நடத்தி குற்றச்செயலலில் ஈடுபட்ட அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இதுதவிர திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் கல்லூரி வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்