பொள்ளாச்சி பாலியல் விவகார வழக்கில் காவல்துறை, யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். இந்நிலையில், பொள்ளாச்சியில் திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நடைபெற இருந்த போராட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் அனுமதிக்க இயலாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறும்போது, ’’ அனுமதி மறுக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் நடக்கும். இந்த பாலியல் விவகாரத்தில் யார் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு இதற்கு பின் பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருக்கிறது. அதில் அதிமுக தொடர்பு இருக்கிறது. அதற்காகத்தான் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள ’பார்’ நாகராஜ் என்பவரை அந்தக்கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட ஒருவர், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், முக்கிய புள்ளிகள் சம்மந் தப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லிய பிறகும் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக இல்லை. இதில் நிச்சயம் அரசியல் தலையீடு இருக்கிறது என்பது பத்திரிகைகள் மூலமாக தெரியவருகிறது. எந்த அளவுக்கு காலதாமதம் செய்ய முடியுமோ, அதை செய்கிறார்கள். இதற்கு பின்னும் நடவடிக்கை எடுக்கவில் லை என்றால், அவர்கள் யாரையோ காப்பாற்றதான் இப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்றார்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்