குழாயை காணவில்லை ! புகார் அளித்து தனக்கான நீதியை பெற்ற திரூப்பூர் வாசி

Govt-Officials-bribes-to-provide-drinking-water-connection-at-Tiruppur

திருப்பூரில் குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்ட அதிகாரிகளை வடிவேலு பட பாணியில் தனது குழாய் இணைப்பை காணவில்லை என புகார் அளித்து குடிநீர் குழாய் இணைப்பை ஒருவர் பெற்றுள்ளார்.


Advertisement

திருப்பூர் பிகேஆர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் தனது மனைவி கோமதி மற்றும் இரண்டு மகன்களுடன் அப்பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் தனது வீட்டிற்கு புதிதாக குடிநீர் இணைப்பு குழாய் வழங்க மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவர் குடிநீர் இணைப்புக்கான தொகையையும் செலுத்தி உள்ளார். இதனை அடுத்த இரண்டு தினங்களில் வந்த மாநகராட்சி ஊழியர்கள் குழாய் இணைப்பு வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர். அதற்கு ஜோதிமணி பணம் தரமுடியாது என்ற உடன் அவர்கள் குடிநீர் இணைப்பு வழங்காமல் சென்றுள்ளனர். 

Related image


Advertisement

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக ஜோதிமணிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜோதிமணி, தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலர்கள் இடம் முறையிட்டுள்ளார். பின்னர் அவரை அலைக்கழித்த மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு எந்தவிதத்திலும் குடிநீர் இணைப்பு வழங்க முன்வரவில்லை.

இதனையடுத்து தனது அண்ணன் சரவணனின் உதவியுடன் கடந்த 9ஆம் தேதி அன்று ஆன்லைன் மூலமாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது குழாய் இணைப்பை யாரோ திருடி விட்டார்கள், அதனை மீட்டுத்தருமாறு புகார் மனு அளித்திருந்தார். வடிவேலு பட பாணியில் கிணற்றை காணவில்லை என்ற புகாரினை போல இந்த குழாயை காணவில்லை என்று புகார் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை கலக்கத்தில் ஆழ்த்தியது. 


Advertisement

இதனைதொடர்ந்து இன்று உடனடியாக ஜோதிமணியின் வீட்டிற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் அவருக்கு உடனடியாக குழாய் இணைப்பு வழங்கினர். நகைச்சுவையாக இருந்தாலும் தனக்கு சேரவேண்டிய குழாய் இணைப்பை புகாரின் மூலமாக மூன்றே தினத்தில் பெற்ற இந்த திருப்பூர் வாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement