இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஜாம்பவான்கள் வரிசையில் எப்பொழுதோ இணைந்துவிட்டார் விராட் கோலி. தற்போதைய நிலையில், பல போட்டிகளில் ஒரு தனிமனிதனாக அணியின் வெற்றியை அவர் தன்னுடைய தோள்களில் தூக்கிச் சென்று கொண்டிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் விராட் கோலியின் பயணம் 2008 ஆம் ஆண்டு அவர் யு-19 இளையோர் உலகக் கோப்பையை வென்றவுடன் ஆரம்பித்துவிட்டது. அந்த இளையோர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்தது கூடுதல் சிறப்பு.
அணியில் இடம்பிடித்த பின்னர், முதல் இரண்டு ஆண்டுகள் கோலிக்கு சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. அவ்வவ்போது சில போட்டிகளில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். 2010ம் ஆண்டு முதல்தான் விராட் கோலியின் ரன் மிஷின் வரலாறு தொடங்கியது. அந்த ஆண்டு 25 போட்டிகளில் விளையாடி 995 ரன்கள் குவித்தார். அதில் 3 சதங்களும், 7 அரைசதங்களும் அடங்கும். 2011ம் ஆண்டு 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதம், 8 அரைசதங்களுடன் 1381 ரன்கள் குவித்தார். 2012ம் ஆண்டில் வெறும் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1026 ரன்கள் எடுத்தார்.
2012 ஆம் ஆண்டு விராட் கோலிக்கு ஒரு சிறப்பான ஆண்டு என்றே கூறலாம். அந்தாண்டில் விராட் கோலி தனது அதிகபட்ச ஸ்கோரான 183 ரன்களை அடித்தார். இந்திய அணி சார்பில் 2010,2011,2012 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி. அதன்பிறகு சாதனை புத்தகங்களை தனது ஒவ்வொரு ஆட்டத்திலும் மாற்றி எழுத வைத்தார் விராட் கோலி.
2013-ல் 1268, 2014-ல் 1054 ஒவ்வொரு ஆண்டிலும் ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்தார். 2017ம் ஆண்டு அதிகபட்சமாக 1460 ரன்கள் எடுத்தார். 2012 முதலே ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் சிறந்த வீரராக விராட் கோலி வலம் வர தொடங்கினார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் கோலி.
அத்துடன் கேப்டனாக அதிவேகமாக 4000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் சேஸ் செய்யும் போது 25 சதங்களை 60க்கு மேலான சராசரியுடன் கோலி அடித்துள்ளார். அத்துடன் கடந்த ஒருநாள் போட்டிகளில் அரைசதம் கடந்த போட்டிகளில் கோலியின் ஸ்கோர்கள் 121,113,140,157,107,116,123 ரன்களாக உள்ளன. மேலும் ஒருநாள் போட்டிகளில் 60.08 சராசரி வைத்துள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இவ்வாறு கோலியின் சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகின்றன.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை