மிசோரம் மாநில ஆளுநர் கும்மணம் ராஜசேகரன் ராஜினாமா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மிசோரம் மாநில ஆளுநராக இருந்த கும்மணம் ராஜசேகரன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அத்துடன் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

கேரளா மாநில பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் கும்மணம் ராஜசேகரன். இவர் கடந்த 2018 மே மாதம் மிசோரம் மாநில ஆளுநராக பதவியேற்றார். இவர் 10 மாதங்களாக மிசோர மாநில ஆளுநராக பணியாற்றிவந்தார். இந்நிலையில் இன்று ராஜசேகரன் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

          


Advertisement

இதனையடுத்து குடியரசு தலைவர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ராஜசேகரனின் ராஜினாமா குடியரசு தலைவர் ஏற்றுகொண்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அசாம் மாநிலத்தின் ஆளுநர் ஜெகதீஷ் முக்கி கூடுதல் பொறுப்பாக மிசோரத்தின் ஆளுநராக பணியாற்றுவார் எனக் கூறியுள்ளார். இதனால் கும்மணம் ராஜசேகரன் மறுபடியும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

          

மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜசேகரன் திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் சிபிஐ கட்சியின் சி.திவாகரன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவவுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் தன் எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement