JUST IN

Advertisement

கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்தம்: முரளி விஜய் அவுட், ரிஷாப்புக்கு அதிர்ஷ்டம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Advertisement

இந்திய கிரிக்கெட் வாரியம், ஏ பிளஸ், ஏ, பி, சி என்ற நான்கு பிரிவுகளாக, வீரர்களை வகைப்படுத்தியுள்ளது. அதன்படி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. ஏ பிளஸ் பிரிவில் இடம்பிடித்திருக்கும் வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ரூ. 3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடியும் என ஒப்பந்தம் செய்யப்படும். இதுதவிர, ஒவ்வொரு போட்டிகளுக்கும் தனித்தனியாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.


Advertisement

இந் நிலையில், ஏ பிளஸ் பிரிவில் இருந்த ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர், அதில் இருந்து ஏ பிரிவுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஏ பிளஸ் பிரிவில், கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஆண்டு ஊதியம் ரூ.7 கோடி.

ஏ பிரிவில், ஆர். அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர்குமார், புஜாரா, ரஹானே, தோனி, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான ஊதியம் ரூ.5 கோடி. குல்தீப், ரிஷாப் பன்ட், ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து ஏ பிரிவுக்கு முன்னேறி இருக்கின்றனர்.


Advertisement

பி பிரிவில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், சாஹல் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.3 கோடி.

சி பிரிவில், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, விஹாரி, கலீல் அகமது, சஹா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

கடந்த வருடம் வரை ஊதிய ஒப்பந்தத்தில், ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் முரளி விஜய், இந்த வருட ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இப்போது ஒப்பந்தத்தில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement