போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்பான வழக்கில் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை முறையாகவும், தொடர்ச்சியாகவும் நடத்த உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போலியோ முகாம் குறித்து போதுமான விழிப்புணர்வோ, விளம்பரங்களோ செய்யப்படுவது இல்லை என வாதிட்டார்.
இதையடுத்து பேசிய நீதிபதிகள், மக்களிடம் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ள நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வை முன்னெடுத்தால், மக்களை இத்திட்டம் எளிதாக சென்றடையும் என கருத்து தெரிவித்தனர். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் ஆணையிட்டனர். செய்தித்தாள்கள், ஊடகங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கூறிய நீதிபதிகள், விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்