‘சர்கார்’ படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49-P குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
கடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சர்கார்’. இந்தப் படத்தில் வெளிநாட்டிலிருக்கும் விஜயின் வாக்கை, கள்ள ஓட்டாக யோகி பாபு பதிவு செய்துவிடுவார். தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வரும் விஜய் தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து நியாயம் கேட்பார்.
இதற்காக கள்ள ஓட்டினை தடுக்கும் சட்டமான 49P சட்டப்பிரிவின் கீழ் விஜய் வழக்குத் தொடுப்பார். அதன்பிறகு தமிழக அரசியல் சூழலே தலைகீழாக மாறும். 49P எனும் சட்டப்பிரிவு குறித்து பேசிய ‘சர்கார்’ படத்தையடுத்து, தற்போது மக்களவைத்தேர்தல் நெருங்கியுள்ள சூழலில், தேர்தல் ஆணையமும் இந்தப் பிரிவை கையில் எடுத்துள்ளது.
உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பித்து வாக்களிக்கலாம் எனச் சொல்கிறது தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்.
Loading More post
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு!
நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' கருவியுடன் தீவிர சிகிச்சை!
"நீங்கள்தான் 2-ம் அலைக்கு பொறுப்பு!"- மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மீது மஹுவா கொந்தளிப்பு
கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிய ஹரித்வார் கும்பமேளா: 30 சாதுக்களுக்கு தொற்று உறுதி!
நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு - தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்