[X] Close >

ரூ.2,000 நிதியுதவி வழக்கும் திட்டம்: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Chennai-HC-s-judgement-today-about-Rs-2000-scheme

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.


Advertisement

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்குவதற்கு குடும்பங்களைக் கண்டறிவதில் தவறு நடந்திருப்பதாகவும், தேர்தல் நோக்கத்திற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படிருந்தது. நிதியுதவி திட்டம் தொடர்பான அரசாணையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், பத்திரிகை செய்திக்குறிப்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.


Advertisement

போலியான அரசாணையை மனுதாரர் தாக்கல் செய்திருப்பதாகவும், மனுதாரருக்கு எங்கிருந்து இந்த நகல் கிடைத்தது என ஆய்வு செய்து வரு வதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், தாங்கள் தாக்கல் செய்த அரசாணை அசல்தான் என்றும், 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி குறித்து ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை, தமிழக அரசு மீண்டும் மாற்றியிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close