திருமண உறவை மீறிய பந்தம் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்கள் தான் காரணமாக உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருமண உறவை மீறிய பந்தம் வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
திருமண உறவை மீறிய பந்தம் அதிகரிக்க தொலைக்காட்சி சீரியல்களும், திரைப்படங்களும் காரணமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ஆண் மற்றும் பெண்கள் சுயமாக சம்பாதிப்பதாலும், பொருளாதார சுதந்திரத்தாலும் இதுபோன்ற பந்தம் அதிகரிக்கிறதா எனவும் பேஸ்புக், வாட்ஸ் -அப் உள்ளிடடட சமூக வலைதளங்கள் திருமண உறவை மீறிய பந்தந்தை ஏற்படுத்த ஒரு தளத்தை உருவாக்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், மேற்கத்திய கலாச்சாரமும், மதுவுக்கு அடிமையான வாழ்க்கை துணையும் இதுபோன்ற பந்தத்தை உருவாக காரணமா என்றும் கூட்டுக் குடும்ப முறை மறைந்ததும் காரணமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதவிர, நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது விருப்பமில்லாதவரை திருமணம் செய்துகொள்வதால் திருமண உறவை மீறிய பந்தம் அதிகரித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற பிரச்னைக்கு முற்றுபுள்ளி வைக்க உளவியல் ரீதியான சிகிச்சை உள்ளிட்டவை வழங்குவது குறித்து தீர்மானிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்தால் என்ன எனவும் ஆலோசனை தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக ஜீன் 21 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Loading More post
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
"எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாதீர்கள்" - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா, கலைஞர் இல்லாமல் நடக்கும் தேர்தல்; எல்லாக் கட்சிக்கும் புதுத் தேர்தல் - பிரேமலதா
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?