தூய்மையான நகரங்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்தூருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.
தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, டெல்லியில் நேற்று நடைபெற்றது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு விருதுகளை வழங்கினார்.
இந்தியாவில் தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சத்தீஷ்கரில் உள்ள அம்பிகாபூர், கர்நாடகாவில் உள்ள மைசூர் ஆகிய நகரங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன. தூய்மையான மிகப்பெரிய நகரத்துக்கான விருது அகமதாபாத்துக்கும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கும் வழங்கப்பட்டுள் ளது.
சிறந்த கங்கா மாவட்டத்துக்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?