“தேமுதிகவினர் திரும்ப வந்து சீட் கேட்டார்கள்” - துரைமுருகன் அதிரடி  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேமுதிக இணைந்தால் கொடுப்பதற்கு சீட் இல்லை எனத் தெரிவித்துவிட்டேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 


Advertisement

தேமுதிக நிர்வாகிகள் சிலர் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள துரைமுருகன் இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துரைமுருகனை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள், இது தனிப்பட்ட சந்திப்பு என்று கூறினர். 

ஆனால், இது கூட்டணிக்கான சந்திப்பு என்று துரைமுருகன் செய்தியாளர்களிடம் பிறகு கூறினார். இதுகுறித்து, “விஜயகாந்த் மைத்துனர் சுதிஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதிமுக அணியை விடுத்து திமுக கூட்டணியில் சேர விரும்புவதாக கூறினார். எங்கள் தலைவர் ஊரில் இல்லை. அத்தோடு, எங்களிடம் கொடுப்பதற்கு போதிய சீட் இல்லை. அதனால் மன்னித்துவிடவும் என்று கூறினேன். நாங்களே 20 இடங்களில் தான் நிற்கிறோம். 


Advertisement

பின்னர், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்ட சில தேமுதிக நிர்வாகிகள் சிலர் வீட்டிற்கு வந்தனர். உங்களோடு கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தனர். ஏன் அங்கிருந்து வர விரும்புகிறீர்கள் என்று கேட்டேன் அதற்கு சரியான பதில் இல்லை. ஏதோ தவறாக இருப்பதாக பட்டது. கூட்டணியில் தேமுதிக இணைவது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார்” என்றார் துரைமுருகன். 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement