இன்று கூட்டணி முடிவை அறிவிக்கிறதா தேமுதிக..?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேமுதிக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணிக்கு வர தேமுதிக அதிக தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால் அதற்கு அதிமுக மறுப்பதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடைய தேமுதிக தலைவர் விஜயகாந்தை, அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “ கூட்டணி பற்றிய அனைத்து கட்சிகளின் முடிவுகளும் 6-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும். பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் பங்கேற்று நாட்டின் பிரச்னைகள் குறித்தும், யார் தலைமை ஏற்றால் நாட்டிற்கு நல்லது என்பது குறித்தும் தங்கள் கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள்” என்று தெரிவித்தார். அத்துடன் பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டில் விஜயகாந்த் உறுதியாக இருப்பார் என தெரிவித்தார்.


Advertisement

இதனிடையே தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் தேமுதிக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை தேமுதிக இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement