கராச்சியில் இருந்தாலும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை வைத்திருப்பவர்கள் இலவச சிகிச்சை பெறலாம் என பிரதமர் மோடி கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டார். ஜாம்நகரிலுள்ள குருகோவிந்த் மருத்துவமனையில் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அதில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது “ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை இருந்தால், நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும். கொல்கத்தாவில் இருந்தாலும் சரி, கராச்சியில் இருந்தாலும் சரி நீங்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற முடியும்” என்று தெரிவித்தார்.
இதைகேட்ட உடனே மக்கள் அனைவரும் சில வினாடிகள் குழம்பினர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் எப்படி இந்தியாவின் சுகாதார அட்டை செல்லும் என்று மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, தாம் கராச்சியை குறிப்பிடவில்லை என்றும் கேரள மாநிலம் கொச்சியை குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் சமீபகாலமாக எந்த நேரத்திலும் அண்டை நாடு குறித்து கவனம் செலுத்தி வருவதால் கொச்சிக்குப் பதில் கராச்சி என்று கூறிவிட்டதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
Loading More post
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்