40வது சதம் விளாசினார் விராட் கோலி - ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன் இலக்கு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில்  ரோகித் சர்மா டக் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். அவரை தொடர்ந்து தவான் 21(29), அம்பத்தி ராயுடு 18(32) ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 75 ரன்னிற்குள் மூன்று விக்கெட்களை இழந்தது. 

      


Advertisement

பின்னர், 5வது விக்கெட்டுக்கு விராட் கோலி, விஜய் சங்கர் இருவரும் போட்டிப் போட்டு ரன்களை எடுத்தனர். இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த விஜய் சங்கர், ஜம்பா வீசிய 29வது ஓவரில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது. விஜய் சங்கர் 41 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். 

விஜய் சங்கர் ஆட்டமிழந்த போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், பின்னர் வந்த கேதர் ஜாதவும் 11 ரன்னிலும், தோனி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், கேப்டன் விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஜடேஜா அவருக்கு ஒத்துழைப்பு தந்தார்.

      


Advertisement

விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 40வது சதத்தினை பதிவு செய்தார். சற்று நேரம் நிலைத்து ஆடிய ஜடேஜா 21(40) ரன்னில் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 116(120) ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4 விக்கெட்கள் சாய்த்தார். ஜம்பா 2 விக்கெட் வீழ்த்தினார்.

      

இந்தப் போட்டியில் சதம் அடித்த நிலையில் கேப்டன் விராட் கோலி பல்வேறு மைல்கலை எட்டியுள்ளார். 

* சர்வதேசப் போட்டிகளில் கேப்டனாக 9 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
* 1000வது பவுண்டரியை அடித்துள்ளார்.
* கேப்டனாக ஒருநாள் போட்டியில் அவர் அடித்துள்ள 18வது சதம்.
* கேப்டனாக மொத்தமாக அடித்துள்ள 36வது சதம்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 7வது ஒருநாள் சதம்.
* பேட்டிங் சராசரி 60ஐ எட்டியுள்ளார்.

     

loading...

Advertisement

Advertisement

Advertisement