“மெகா கூட்டணி குறித்தும் பேசப்பட்டது” - விஜயகாந்த்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனான சந்திப்பின்போது, மெகா கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை சாலிகிராமத்திலுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்றார். அவருடன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர். சுமார் ஒருமணிநேரம் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்களவைக் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


Advertisement

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், “அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (04.03.2019) இன்று எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக, நலம் விசாரித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பாராளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது, “அதிமுகவின் கூட்டணியில் தேமுதிக இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றோ அல்லது நாளை அதில் நல்ல முடிவு எட்டப்படும். 6ஆம் தேதிக்குள் அனைத்து கூட்டணி கட்சிகள் குறித்த முடிவுகள் எடுக்கப்படும். நாளை மறுநாள் (6ஆம் தேதி) பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டு, யார் பிரதமராக வரவேண்டும் என எழுச்சி உரையாற்றவுள்ளனர். தேமுதிகவிற்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது இன்றோ, நாளையோ தெரியும்” என்று தெரிவித்திருந்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement