திமுகவுக்கும், இந்திய ஜனநாயக கட்சிக்கும் இடையே மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
கடந்த சனிக்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக, ஐஜேகே இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளது.
மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியை விருப்பத் தேர்வாக கேட்டுள்ளதாக கூறிய ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, தாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும், எந்தத் தொகுதி ஒதுக்கினாலும் போட்டியிடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது திமுக கூட்டணியில் ஐஜேகே இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
‘திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு’
கழக தலைவர் @mkstalin அவர்கள் முன்னிலையில் '2019 - மக்களவைத் தேர்தல்' ஒப்பந்தம் கையெழுத்தானது. pic.twitter.com/QrryMxqFo2— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) March 4, 2019Advertisement
Loading More post
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!