நாக்பூர் மைதானத்தில் தோனியின் ஆட்டம் எப்படி இருக்கும்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தோனியின் புதிய ஃபார்ம் ஆஸ்திரேலியாவிற்கு அதிக நெருக்கடியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி ஹைதராபாத்தில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி, 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.


Advertisement

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நாளை நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் தோனியின் செயற்பாடு இதுவரை சிறப்பாக இருந்து வந்துள்ளது. அத்துடன் தோனியின் தற்போதைய ஃபார்ம் சிறப்பாக இருப்பதால் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்மச் சொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனியின் தற்போதைய ஃபார்ம் பற்றி சில விஷயங்களை விளக்கலாம்.


Advertisement

இந்தாண்டு தொடக்கத்தில் தோனி மீது அதிக விமர்சனங்கள் எழுந்ததை பலரும் அறிவர். அவர் முன்பை போல் விளையாடுவது இல்லை எனப் பலரும் குற்றச்சாட்டி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தோனியின் ஆட்டம் தற்போது மாறியுள்ளது. அதாவது இந்தாண்டு தோனி 6 இன்னிங்கிசில் பேட்டிங் செய்துள்ளார். அதில் 301 ரன்களை குவித்துள்ளார். அத்துடன் இந்தாண்டு அவருடைய சராசரி 150.50 ஆக உள்ளது. 

தோனியின் சராசரி தான் இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் சிறந்த சராசரியாக உள்ளது. ஒரு ஆண்டில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன் பட்டியலில் அதிக சராசரியை தன்வசம் வைத்திருப்பவர்களில் தோனிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் நாளை நாக்பூர் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் தோனியின் கடந்த கால ரெகார்ட் சிறப்பாகவே இருந்துள்ளது. நாக்பூரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 268 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர இந்த மைதானத்தில் தோனி இரண்டு சதங்களை அடித்துள்ளார். அதில் ஒன்றை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அடித்துள்ளார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தற்போது வரை தோனி தொடர்ச்சியாக நான்கு அரைசதங்களை அடித்துள்ளார். மேலும் இந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் இதுவரை தோனி 1600 ரன்களையும் எடுத்துள்ளார். 

எனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தோனியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்துள்ளது. இதனால் முதல் போட்டியை போல் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோனி அசத்தலாக விளையாடுவார் என பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. அத்துடன் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தோனி சிம்மச் சொப்பனமாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement